தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர்களை ஏற்றி வரவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களை எடுத்துச் செல்லவும் டிரெய்லர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான டிரெய்லர் லாரிகள் தினமும் துறைமுகத்துக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில், சென்னையை சேர்ந்த டிரெய்லர் லாரிகளுக்கு சரக்குகளை ஏற்றுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரி அதன் உரிமையாளர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகத்துக்கு வந்த டிரெய்லர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கன்டெய்னர்களை ஏற்றி, இறக்கும் பணி பாதிக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் வரை லாரிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. இதனால் காசிமேடு எஸ்.என்.செட்டி தெரு, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் தேங்கும் நிலை ஏற்படும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/23/2012 4:04:53 PM
-Updated 7/23/2012 2:07:47 PM
-Updated 7/23/2012 2:06:12 PM
-Updated 7/16/2012 3:21:05 PM
-Updated 7/16/2012 2:59:16 PM
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM