15 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான வீடு மனை ஒதுக்கீடு ரத்து
சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேருக்கான வீடு மனை ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நெற்குன்றத்தில் சலுகை விலையில் 1,016 வீடுகள் கட்ட 17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மொத்தம் ரூ.445 கோடியில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதில், 608 வீடுகள் ஏஐஎஸ் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குருப் 1 அதிகாரிகளுக்கு 128 வீடுகளும், 288 வீடுகள் வருமானம் குறைவாக உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டது.
இதில், அரசு விருப்புரிமையின் கீழ் ஏற்கனவே வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளனர். அதிகாரிகள் பலருக்கு இத்திட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாவும் இது வாரிய அடிப்படை விதிகளுக்கு எதிரானது எனவும் புகார் எழுந்தது. இந்நிலையில், தற்போது, 15 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 14 ஐஏஎஸ் அதிகாரிகள், 15 அகில இந்திய சர்வீஸ் ஆபிசர்ஸ்(ஏஐஎஸ்) தங்கள் ஒதுக்கீட்டிற்கான ஆணையை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM
-Updated 6/26/2012 3:07:21 PM
-Updated 6/26/2012 3:06:31 PM
-Updated 6/26/2012 3:06:12 PM
-Updated 6/26/2012 2:54:23 PM
-Updated 6/26/2012 12:16:16 PM