சித்தூர்: அரசு பஸ் மீது லாரி மோதியதில் 6 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இதில் 25க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டம் தேவரகொண்டாவிலிருந்து வீரியலாகூடாவுக்கு நேற்றிரவு 11.30 மணியளவில் ஆந்திர அரசு பஸ் 36 பயணிகளுடன் புறப்பட்டது. ஆதிசெர்லபள்ளி அருகே பஸ் நிறுத்தத்திற்கு முன்பாக கண்டக்டர் டிக்கெட் கொடுப்பதற்காக டிரைவர் பஸ்சை மெதுவாக ஓட்டிச் சென்றாராம். அப்போது விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்துக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி, பஸ் மீது மோதியது. இதில் வலதுபுறம் முழுவதும் சேதமடைந்தது.
பஸ்சில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் லட்சுமம்மாள்(50), சுமலதா(25) ஆகியோர் அதே இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மற்றவர்கள் படுகாயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டதும் அருகே இருந்த பொதுமக்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். வீரியலாகூடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM
-Updated 6/26/2012 3:07:21 PM
-Updated 6/26/2012 3:06:31 PM
-Updated 6/26/2012 3:06:12 PM
-Updated 6/26/2012 2:54:23 PM
-Updated 6/26/2012 12:16:16 PM