கூட்டுறவு துறை மூலம் குறைந்த விலையில் காய்கறி நாளை விற்பனை தொடக்கம்
சென்னை: கூட்டுறவு துறை மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு தரமான காய்கறிகள் வழங்கப்பட உள்ளன. விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, சென்னை டியுசிஎஸ் அங்காடி காய்கறி கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். காய்கறி விலையை கட்டுப்படுத்த, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கூடுதல் பதிவாளர்கள் மற்றும் சிந்தாமணி, காமதேனு மொத்த விற்பனை பண்டக சாலை ஆகிய துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த சென்னையில் டியுசிஎஸ் நடத்தும் காமதேனு சிறப்பங்காடிகள் மற்றும் பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நடத்தும் சிந்தாமணி சிறப்பங்காடிகள் மூலம் குறைந்த விலையில் தரமான காய்கறிகளை விற்க அமைச்சர் உத்தரவிட்டார். இதன்படி நாளை முதல் சென்னை நகரில் பொதுமக்களுக்கு கூட்டுறவு துறை மூலம் குறைந்த விலையில் தரமான காய்கறிகள் கிடைக்கும். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியுசிஎஸ் தலைமையகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜு விற்பனையை தொடங்கி வைக்கிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/18/2012 3:11:23 PM
-Updated 6/18/2012 3:11:01 PM
-Updated 6/15/2012 3:26:12 PM
-Updated 6/15/2012 3:11:43 PM
-Updated 6/14/2012 3:26:30 PM
-Updated 6/14/2012 3:10:35 PM
-Updated 6/14/2012 3:10:10 PM
-Updated 6/14/2012 3:07:33 PM
-Updated 6/14/2012 2:34:13 PM
-Updated 6/14/2012 2:28:58 PM
-Updated 6/14/2012 2:10:21 PM
-Updated 6/13/2012 3:53:05 PM
-Updated 6/13/2012 3:52:04 PM
-Updated 6/13/2012 3:50:51 PM
-Updated 6/13/2012 2:53:25 PM