சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சென்னை தலைமை செயலகத்தில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி சந்தித்து பேசினார். அப்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சென்னைக்கு 2 நாள் பயணமாக நேற்று வந்தனர். அவர்கள் கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி நிலையத்தை ஆய்வு செய்தனர். இந்நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று பிற்பகல் 1.15 மணிக்கு அத¢வானி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நீடித்தது. ஜனாதிபதி தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை அத்வானி சந்தித்து பேசியுள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ.சங்மாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஜெயலலிதா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/18/2012 3:11:23 PM
-Updated 6/18/2012 3:11:01 PM
-Updated 6/15/2012 3:26:12 PM
-Updated 6/15/2012 3:11:43 PM
-Updated 6/14/2012 3:39:17 PM
-Updated 6/14/2012 3:10:35 PM
-Updated 6/14/2012 3:10:10 PM
-Updated 6/14/2012 3:07:33 PM
-Updated 6/14/2012 2:34:13 PM
-Updated 6/14/2012 2:28:58 PM
-Updated 6/14/2012 2:10:21 PM
-Updated 6/13/2012 3:53:05 PM
-Updated 6/13/2012 3:52:04 PM
-Updated 6/13/2012 3:50:51 PM
-Updated 6/13/2012 2:53:25 PM