காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் மூத்த தலைவர்கள் மீது தொண்டர்கள் குற்றச்சாட்டு
சென்னை: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படுவதற்கு மூத்த தலைவர்களே காரணம் என்று தொண்டர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமிழக காங்கிரசில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சோ.பாலகிருஷ்ணன் தலைவராகவும், ஈ.வி.கே.எஸ். செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டபோது மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என 400க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர். அதன் பின் ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, தங்கபாலு ஆகியோர் தலைவராக நியமிக்கப்பட்டபோது மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. புதிய தலைவராக ஞானதேசிகன் நியமிக்கப்பட்ட பின்பு, மாவட்ட தலைவர்களை தவிர மற்றவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்று கூறிவிட்டார். இதனால் மாநிலத்தில் மட்டுமல்லாது, மாவட்டத்திலும் நிர்வாகிகள் இல்லாமலே காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. புதிய நிர்வாகிகளை நியமிக்க ஞானதேசிகன் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். நிர்வாகிகள் நியமனத்தில் அனைத்து தலைவர்களையும் கலந்து ஆலோசித்து பட்டியல் தருமாறு காங்கிரஸ் மேலிடம் ஞானதேசிகனிடம் கூறியதை அடுத்து அனைத்து தலைவர்களிடமும் பட்டியல் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதில் சில தலைவர்கள் மட்டும் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் முட்டுக்கட்டை போடுவதாக தொண்டர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பழைய மாவட்டத் தலைவர்களை நீக்கிவிட்டு புதிய தலைவர்களை போட ஞானதேசிகன் முயற்சிப்பதால் இதற்கு சில தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் ஞானதேசிகன் புதிய ரத்தத்தை தமிழக காங்கிரசில் பாய்ச்சவேண் டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். ஜூலை மாதத்திற்குள் நிர்வாகிகள் நியமிக்கப்படவேண்டும். அதற்குள் தங்களது ஆதரவாளர்கள் பட்டியலை கொடுக்கும்படி மூத்த தலைவர்களிடம் ஞானதேசிகன் வலியுறுத்தி உள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/18/2012 3:11:23 PM
-Updated 6/18/2012 3:11:01 PM
-Updated 6/15/2012 3:26:12 PM
-Updated 6/15/2012 3:11:43 PM
-Updated 6/14/2012 3:39:17 PM
-Updated 6/14/2012 3:26:30 PM
-Updated 6/14/2012 3:10:10 PM
-Updated 6/14/2012 3:07:33 PM
-Updated 6/14/2012 2:34:13 PM
-Updated 6/14/2012 2:28:58 PM
-Updated 6/14/2012 2:10:21 PM
-Updated 6/13/2012 3:53:05 PM
-Updated 6/13/2012 3:52:04 PM
-Updated 6/13/2012 3:50:51 PM
-Updated 6/13/2012 2:53:25 PM