பிஏபிஎல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோக தேதி நீட்டிப்பு
சென்னை: பிஏபிஎல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோக தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும், சென்னை அடையாறில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் சட்டப்பள்ளி ஒன்றும் உள்ளது. இதில், 6 கல்லூரிகளில் 5 ஆண்டு பிஏபிஎல் படிப்புகளும், 7 கல்லூரிகளில் 3 ஆண்டு பிஎல் படிப்புகளும் உள்ளன. இவற்றிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் கடந்த மாதம் 28ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. இதில் 5 ஆண்டு பிஏபிஎல் மாணவர்களுக்கு ஜூன் 15ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிகளவு மாணவர் சேர்க்கையை கணக்கில் கொண்டு 5 ஆண்டு பிஏபிஎல் மாணவர்கள் விண்ணப்ப விநியோகம் ஜூன் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த இடங்கள்: தமிழகத்தில் மொத்தம் 7 அரசு சட்ட கல்லூரிகள் உள்ளது. இதில் 6 கல்லூரிகளில் 5 ஆண்டு பிஏபிஎல் படிப்புகள் கற்பிக்கப்படுகிறது. இதில் உள்ள மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள் 1,052. மேலும், 7 கல்லூரிகளில் 3 ஆண்டு பிஎல் படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதில் உள்ள மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள் 1,262. இது தவிர 1 தனியார் சட்ட கல்லூரியும் உள்ளது. ஆனால் அங்கு மாணவர் சேர்க்கையை கல்லூரியே நடத்தி கொள்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/18/2012 3:11:23 PM
-Updated 6/18/2012 3:11:01 PM
-Updated 6/15/2012 3:26:12 PM
-Updated 6/15/2012 3:11:43 PM
-Updated 6/14/2012 3:39:17 PM
-Updated 6/14/2012 3:26:30 PM
-Updated 6/14/2012 3:10:35 PM
-Updated 6/14/2012 3:10:10 PM
-Updated 6/14/2012 2:34:13 PM
-Updated 6/14/2012 2:28:58 PM
-Updated 6/14/2012 2:10:21 PM
-Updated 6/13/2012 3:53:05 PM
-Updated 6/13/2012 3:52:04 PM
-Updated 6/13/2012 3:50:51 PM
-Updated 6/13/2012 2:53:25 PM