2012
31
May
ஆந்திராவில் பெட்ரோல் வரி குறைக்க தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு


ஐதராபாத்,: ஆந்திராவில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்க தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
ஆந்திராவில் ஜெகன் கட்சிக்கு தாவிய 17 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு வரும் ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டது. தெலங்கானா தனி மாநிலம், ஜெகன்மோகன்ரெட்டி கைது போன்ற பிரச்னைகளால் சிக்கி தவிக்கும் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில்தான் பெட்ரோல் மீது 33 சதவீத அளவுக்கு விற்பனை வரி வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வை குறைக்க உள்ளுர் வரிகளை குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இவரது கோரிக்கையை ஏற்று பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வரியை குறைக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி வழங்க ஆணையம் மறுத்துவிட்டது. இதற்கு முன்பு பல முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போது மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது இந்த கோரிக்கைக்கு ஆந்திர அரசு செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
10th Result 2012, SSLC Results 2012,  Anglo indian result 2012, matriculation result 2012, SSLC Exam Results, CBC result 2012, 10th sslc results
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,