2012
31
May
கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் தீ : பயணிகள் உயிர் தப்பினர்


பெங்களூர்: பெங்களூரிலிருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. பெங்களூர் சிட்டி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேற்றிரவு சரியாக 9.45 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. 10.10 மணிக்கு கே.ஆர்.புரம் ரயில்நிலையத்துக்கு வந்தது. 5 நிமிடத்துக்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே ஏசி 3 டயர் பெட்டியிலிருந்து கரும்புகை வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒயிட்பீல்டு ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனை வரும் ரயிலை விட்டு இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் தீயணைப்புக் கருவிகள் உதவியுடன் ஏசி 3 டயர் பெட்டியில் பரவிய தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதன்பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், பயணத்தை தொடர்ந்தது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
10th Result 2012, SSLC Results 2012,  Anglo indian result 2012, matriculation result 2012, SSLC Exam Results, CBC result 2012, 10th sslc results
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,