2012
31
May
கார்-லாரி மோதல் 10 பேர் பரிதாப சாவு


பெங்களூர்: கர்நாடகாவில் காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உடல் நசுங்கி பலியாகினர். கோவா மாநிலம் சக்காளி கிராமத்தை சேர்ந்தவர்கள், மகாராஷ்டிர மாநிலம் கொல்லாபுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் நிப்பானி அருகே தேசிய நெடுஞ்சாலையில், எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று, திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 8 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் கிடைத்த வந்த போலீசார், காயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 2 பேர் வழியில் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் அடங்குவர்.
விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவாவில் உள்ள உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். விபத்து குறித்து நிப்பானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
10th Result 2012, SSLC Results 2012,  Anglo indian result 2012, matriculation result 2012, SSLC Exam Results, CBC result 2012, 10th sslc results
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,