ரூ.1000 கோடி மோசடி விவகார வழக்கு பொருளாதார குற்றபிரிவுக்கு மாற்றம்
சேலம்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள மேல்கலிங்கம்பட்டியில் ஜெகதீசன் என்பவர், ஜெனித் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் மூலிகை பண்ணை நடத்தி வந்தார். பண்ணை அபிவிருத்திக்காக பொதுமக்களிடம் இருந்து முதலீடுகள் பெறப்படுவதாகவும், முதலீடுக்கு 30 நாட்களில் 50 சதவீத வட்டியும், முதலீட்டு தொகையும் திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ஈரோடு, கொல்லிமலை, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, வெடிகாரன்புதூர், நிலவாரப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, மல்லூர், பாரப்பட்டி ஆகிய பகுதி மக்கள், தொழில் அதிபர்கள் இத்திட்டத்தில் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1.25 கோடி வரை தங்கள் சக்தியை மீறி முதலீடு செய்தனர்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக ராசிபுரத்தில் உள்ள ஜெனித் ஹெர்பல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகங்கள் பூட்டப்பட்டு உள்ளன. தொழில் அதிபர் ஜெகதீசன் மற்றும் இவருக்கு முக்கிய ஏஜன்டுகளாக செயல்பட்ட சிவராஜ், பழனிசாமி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 270 பேர் நேற்று சேலம் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸிடம் புகார் அளித்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ரூ.1000 கோடி வரை வசூலித்துக் கொண்டு ஏமாற்றி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்த மேலும் 100 பேர் இன்றும் சேலம் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர். எஸ்.பி. கூறுகையில், ‘‘அஷ்வின் கோட்னீஸிடம் கேட்டபோது, ÔÔஜெனித் ஹெர்பல்ஸ் நிறுவனத்தின் மீது நேற்று வரை 270 பேரிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து பலர் புகார் அளித்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட உள்ளது. தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்ÕÕ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM
-Updated 5/26/2012 4:16:36 PM
-Updated 5/26/2012 4:16:19 PM
-Updated 5/26/2012 4:11:04 PM
-Updated 5/25/2012 3:02:18 PM
-Updated 5/25/2012 3:01:57 PM
-Updated 5/25/2012 2:28:18 PM
-Updated 5/25/2012 2:28:02 PM