ஆட்டோ டிரைவர் நடுரோட்டில் படுகொலை: மதுரையில் நள்ளிரவில் பயங்கரம்
மதுரை: மதுரையில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் ராஜபாண்டி (31), ஆட்டோ டிரைவர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் செல்லூர் அகிம்சாபுரம் 1வது தெருவில் ராஜபாண்டி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், ஆட்டோவை வழிமறித்து ராஜபாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார். பின்னர் கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.
இது குறித்து தகவலறிந்த செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ராஜபாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜபாண்டி கொலையானது முன்விரோதத்தில் நடந்ததா? அல்லது தொழில் போட்டியில் நடந்ததா? என செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM
-Updated 5/26/2012 4:16:36 PM
-Updated 5/26/2012 4:16:19 PM
-Updated 5/26/2012 4:11:04 PM
-Updated 5/25/2012 3:02:18 PM
-Updated 5/25/2012 3:01:57 PM
-Updated 5/25/2012 2:28:36 PM
-Updated 5/25/2012 2:28:02 PM