சென்னை: சட்டசபையில் இன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசியது: அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுவதுபோன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். 2008, 09 மற்றும் 2010ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவு மூப்பினை மீண்டும் பெறவும் அதன்மூலம் வேலைவாய்ப்பை பெற்றிட உதவும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இதனால் சுமார் 50 ஆயிரம் பேர் பயனடைவர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM