சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது வருவாய் துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது, சபாநாயகர் ஜெயக்குமார், ஆவடி அதிமுக உறுப்பினர் அப்துல் ரகீமுக்கு துணை கேள்வி கேட்க வாய்ப்பளித்தார். அவர் எழுந்தவுடன், சபாநாயகர், ‘இந்த கூட்டத் தொடரில் அப்துல் ரகீம் கேட்கப்போவது ஆயிரமாவது துணை கேள்வி. ஒரே கூட்டத் தொடரில் 1000 துணை கேள்விகளுக்கு மேல் வாய்ப்பளித்து இருப்பது இந்த அரசின் பெருந்தன்மையை காட்டுகிறது என்றார். இதையடுத்து சபாநாயகருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனை வரும் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்கள் வளர்மதி, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி ஆகியோரும், பாலபாரதி (மார்க்சிஸ்ட்) ரங்கராஜன், விஜயதரணி (காங்கிரஸ்) ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM