கன்டெய்னர் லாரி மோதி தாய் பலி; மகன் படுகாயம் : புதிய பைக்கில் சென்ற போது பரிதாபம்
திருவொற்றியூர்: எர்ணாவூர் காந்தி நகரை சேர்ந்தவர் லோகநாதன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மல்லிகா (54) மகன் செந்தில் (28). துபாயில் வேலை பார்த்து விட்டு கடந்த மாதம் ஊருக்கு வந்திருந்தார். இங்கு செந்திலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த வாரம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் தான் வாங்கிய புதிய பைக்கில் அம்மாவை அழைத்து கொண்டு அருகில் உள்ள கோயிலுக்கு பூஜை செய்ய சென்றார். பின்னர், 2 பேரும் திருமண பத்திரிகை வைக்க திருவொற்றியூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, பைக் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில், மல்லிகா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். லேசான காயத்துடன் இருந்த செந்திலை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். ஆத்திரம் அடைந்த மக்கள் லாரியை அடித்து உடைத்தனர். சிறிது நேரம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதேபோல, எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த மனோகரன் (55) இன்று காலை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM
-Updated 5/26/2012 4:16:36 PM
-Updated 5/26/2012 4:16:19 PM
-Updated 5/26/2012 4:11:04 PM
-Updated 5/25/2012 3:02:18 PM
-Updated 5/25/2012 3:01:57 PM
-Updated 5/25/2012 2:28:36 PM
-Updated 5/25/2012 2:28:18 PM