ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம் திம்ம பூபாலபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் ஜெயசந்திரன் தலைமை தாங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் வீரராகவன், கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் கணேஷ்பாபு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரத்தின இளங்கோ முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜெகதீசன் வரவேற்றார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.10.51 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட மூன்று வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் சந்திரசேகரனுக்கு பாராட்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை பாராட்டி பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. முடிவில் ஆசிரியர் அருணகிரி நன்றி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM
-Updated 4/27/2012 3:47:58 PM
-Updated 4/27/2012 3:47:38 PM
-Updated 4/27/2012 3:32:33 PM
-Updated 4/27/2012 3:32:09 PM
-Updated 4/27/2012 3:31:20 PM
-Updated 4/27/2012 3:31:02 PM
-Updated 4/27/2012 3:30:03 PM
-Updated 4/27/2012 3:27:35 PM
-Updated 4/26/2012 4:57:44 PM
-Updated 4/26/2012 4:48:39 PM
-Updated 4/26/2012 3:41:15 PM