2012
26
Apr
திருத்தணி முருகன் கோயில் வெள்ளி தேரில் உற்சவர் வீதியுலா


திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா, நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று பகல் 11 மணிக்கு வெள்ளி பிரபையில் முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 7 மணிக்கு பூத வாகனத்திலும் காட்சியளிக்கிறார். 28ம் தேதி காலை பல்லக்கு வாகனத்திலும், மாலை வெள்ளி நாக வாகனத்திலும், 29ம் தேதி காலை அன்ன வாகனத்திலும், மாலை வெள்ளி மயில் வாகனத்திலும், 30ம் தேதி மாலை புலி வாகனத்திலும் இரவு 8 மணிக்கு மயில் வாகனத்திலும், மே 1ம் தேதி இரவு வெள்ளித் தேரிலும் வீதியுலா வருகிறார். 2ம் தேதி காலை யாளி வாகனத்திலும் வலம் வருகிறார் அன்றிரவு 8 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. 4ம் தேதி கீர்த்தவாரி உற்சவமும், இரவில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

விழாவையொட்டி தினமும் முருக்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடக்கிறது. தினமும் இரவில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. பெரியநாகபூடியில் உள்ள திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலான நாகேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.வரும் 1ம் தேதி தேர்பவனி நடக்கிறது.
ஏற்பாடுகளை இணை ஆணையர் தனபால் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,