2012
11
Apr
மாணவர்களிடம் ஆபாச பேச்சு ஆசிரியையை டிஸ்மிஸ் செய்ய பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்



கீழ்வேளூர் : மாணவர்களிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியையை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி கீழ்வேளூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் பொதுமக்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் நாகலூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றும் ஒருவர், பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் பாலியல் ரீதியான எண்ணங்களை தூண்டும் வகையில் ஆபாச கதைகள் கூறுவதாகவும், சாப்பிட்ட எச்சில் தட்டை மாணவிகளை கழுவ சொல்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதுபற்றி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த ஆசிரியையை இடமாற்றம் செய்தனர்.இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியையை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி, பெற்றோர் ஆசிரியர் கழகம், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் சார்பில் நேற்று மாலை கீழ்வேளூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊராட்சி தலைவர் பாப்பி தண்டாயுதபாணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபாகரம், வார்டு உறுப்பினர் மலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி  கீழ்வேளூர் வட்டார தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் சுப்பரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், வட்டார மகளிர் அணி செயலாளர் முத்தமிழ் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,