2012
10
Apr
செல்போனில் நிர்வாண படம் பார்த்த இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்


பர்மிங்காம்: இங்கிலாந்தில் அலுவலக ஸ்மார்ட் போனில் ஆபாச படங்களை டவுன்லோடு செய்த போலீஸ்காரர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். லண்டனில் தலைமை இன்ஸ்பெக்டராக இருந்தவர் மார்க் புரூ. வயது 47. இவருடைய அலுவலக பணிக்காக ஐபோன் மற்றும் பிளாக்பெரி போன்களை போலீஸ் துறை வழங்கியது. இந்த போன்களில் இன்டர்நெட்டில் இருந்து நிர்வாண படங்களை டவுன்லோடு செய்து பார்த்து ரசித்துள்ளார். அத்துடன் ஆபாச எஸ்எம்எஸ்களை தனக்கு கீழ் பணிபுரியும் 2 பெண் போலீசுக்கு அனுப்பி உள்ளார். பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதற்காக இவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, நிர்வாண படங்களை டவுன்லோடு செய்தது, 2 பெண் போலீசுக்கு ஆபாச படங்கள், எஸ்எம்எஸ்கள் அனுப்பியது, அதேபோல் அவர்களிடம் இருந்து படங்கள், எஸ்எம்எஸ்களை பெற்றதை ஒப்புக் கொண்டார். இதை 2 பெண் போலீசும் ஒப்புக் கொண்டனர். மேலும், போலீஸ் வாகனங்களை சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், தலைமை இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து புரூ உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,