2012
10
Apr
ஏமன் நாட்டில் ராணுவம் - தீவிரவாதிகள் சண்டையில் 64 பேர் பலி


ஏடன்: ஏமனில் ராணுவத்தினருக்கும் அல் கய்தா தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் 64 பேர் இறந்தனர். ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் அல் கய்தா தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் உதவியுடன் ஏமன் ராணுவம் தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது. அப்யான் மாகாணம் லாடர் நகரில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று அல் கய்தா தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து, ராணுவ வீரர்களும் திருப்பி சுட்டு பதிலடி கொடுத்தனர்.

ராணுவத்துக்கு ஆதரவாக பழங்குடியின மக்களும் ஆயுதங்களை எடுத்து வந்து சண்டையிட்டனர். சுமார் 3 மணி நேரம் நடந்த பயங்கர சண்டையில், 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 18 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 6 பேர் பலியானதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அப்யான் மாகாணத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 24 அல் கய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக தீவிரவாதிகள் இந்த திடீர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,