வள்ளியூர்: நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் ஞானதிரவியம். இவர் அன்னை நிறுவனம் என்ற பெயரில் ஆவரைகுளத்தில் காற்றாலைகள் அமைத்துள்ளார். இதேபோல் சென்னையை சேர்ந்த இன்டோ வின்ட் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலைகளும் இப்பகுதியில் உள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை இந்நிறுவனங்களுக்கு சொந்தமான 4 காற்றாலைகளை ரவுடி கும்பல் தீ வைத்து எரித்தது. இதில் காற்றாலைகளின் அறையில் உள்ள கன்ட்ரோல் பேனல் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து இன்டோ வின்ட் மேலாளர் சுருளிவேலு பழவூர் போலீசில் புகார் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது: ஆவரைகுளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). ரவுடியான இவர், இங்குள்ள காற்றாலை நிறுவன உரிமையாளர்களை மிரட்டி பணம் கேட்கிறார். தரமறுத்தால் காற்றாலை தீ வைத்து எரிக்கிறார். எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/3/2025 12:32:09 PM
-Updated 6/3/2025 12:31:38 PM
-Updated 6/3/2025 12:22:12 PM
-Updated 6/3/2025 11:30:48 AM
-Updated 6/3/2025 11:30:30 AM
-Updated 5/31/2012 6:38:56 PM
-Updated 5/31/2012 6:16:13 PM
-Updated 5/31/2012 6:12:33 PM
-Updated 5/31/2012 5:52:20 PM
-Updated 5/31/2012 4:02:22 PM
-Updated 5/31/2012 3:51:37 PM
-Updated 5/31/2012 3:51:11 PM
-Updated 5/31/2012 3:50:49 PM
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM