2012
28
Mar
தகுதி தேர்வு விண்ணப்பம் வழங்ககோரி ஆசிரியர்கள் திடீர் சாலை மறியல்


திருப்பத்தூர் : தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கக்கோரி திருப்பத்தூர், குடியாத்தம் பகுதியில் இன்று ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் இன்று (28ம்) தேதி விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதனால் இன்று அதிகாலை முதலே ஆசிரியர்கள், பட்டதாரிகள் உள்பட ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அப்போது அங்குள்ள தகவல் பலகையில், Ôவிண்ணப்பங்கள் வராததால் பின்னர் வழங்கப்படும் என அறிவிப்பை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாவட்ட கல்வி அலுவலகம் அருகே உள்ள கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் காலை 6.45 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.குடியாத்தம்: குடியாத்தம் திருவள்ளுவர் துவக்கப்பள்ளியிலும் விண்ணப்பங்களை வாங்க இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அப்போது விண்ணப்பங்கள் வழங்குவது குறித்து எந்த தகவலும் அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கல்வித்துறையை கண்டித்து குடியாத்தம் அருகே உள்ள காட்பாடி சாலை 4 முனை சந்திப்பில் காலை 7.45 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,