புழல் : புழல் பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதை சரிப் படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சென்னை அருகே புழல் பழைய பேரூராட்சி அலுவலகம் பின்புறம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில் இருந்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த தொட்டியின் படிகள் உடைந்து காணப்படுகிறது. தொட்டியின் கரைகளும் பலவீனமாக உள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த பகுதியில் நடமாடுகின்றனர்.
தொட்டிக்கு கீழே, பழுதான கழிவுநீர் லாரி, 3 குப்பை வண்டிகள் மற்றும் 3 சக்கர சைக்கிள்களை போட்டுவைத்துள்ளனர். இதை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பாம்புகள் நடமாடுகின்றன. தொட்டி அருகே நடந்து செல்பவர்கள் தேள், பூரான் கடித்து பாதிக்கப்பட்டுள்ளனர்.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சரிப்படுத்த வேண்டும். காட்டுச்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/8/2025 2:37:38 PM
-Updated 6/8/2025 2:37:24 PM
-Updated 6/8/2025 1:00:58 PM
-Updated 6/7/2025 4:34:43 PM
-Updated 6/7/2025 4:28:26 PM
-Updated 6/6/2025 3:33:10 PM
-Updated 6/6/2025 3:08:28 PM
-Updated 6/6/2025 3:08:00 PM
-Updated 6/6/2025 3:07:12 PM
-Updated 6/6/2025 3:06:45 PM
-Updated 6/6/2025 3:05:54 PM
-Updated 6/6/2025 3:05:24 PM
-Updated 6/6/2025 3:04:58 PM
-Updated 6/6/2025 3:04:26 PM
-Updated 6/6/2025 3:03:05 PM