2012
28
Mar
மர்ம ஆசாமி நடமாட்டத்தால் திருப்போரூரில் மீண்டும் பீதி


திருப்போரூர் : திருப்போரூரில் மீண்டும் மர்ம ஆசாமி நடமாடுவதாக மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இரவில் ரோந்து சென்ற இளைஞர்கள், மர்ம மனிதன் என்று நினைத்து முதியவரை சரமாரி அடித்து காயப்படுத்தி உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம ஆசாமிகள் நடமாடுவதாக மக்களிடையே பீதி ஏற்பட்டது. இரவில் மின்தடை ஏற்படும் நேரத்தில் மர்ம மனிதன் நடமாடுவதாகவும், பெண்களை பிளேடால் கிழிப்பதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து, ஒவ்வொரு தெருவிலும் உள்ளூர் இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக காஞ்சிபுரத்தில் இருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு திருப்போரூர் அருகே தண்டலம் கிராமத்தில் மர்ம மனிதன் நடமாடுவதாக தகவல் பரவியது. இளைஞர்கள் உருட்டுக்கட்டை, ஆயுதங்களுடன் மர்ம மனிதனை தேடினர். அப்போது அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து சரமாரி அடித்து காயப்படுத்தினர். தகவல் கிடைத்து வந்த திருப்போரூர் போலீசார், முதியவரை மீட்டு விசாரித்தனர். அவர் வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த மணி (60) என்பதும் திருப்போரூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பெயின்ட் வேலை செய்ததும் தெரிந்தது. அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதியவரை தாக்கியதாக தண்டலம் பகுதியை சேர்ந்த முருகன், மாரி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் திருப்போரூர் கச்சேரி சந்து தெரு பகுதியில் உள்ள செல்வராஜ், சண்முகம், கணேசன், கந்தசாமி ஆகியோரது வீடுகள் மீது சரமாரியாக கற்கள் விழுந்தன. தெருவில்  யாரோ அலறுவதுபோல சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த பகுதி இளைஞர்கள், உருட்டுக்கட்டையுடன் ரோந்து சென்றனர். ஆனால், மர்ம நபர்கள் யாரும் சிக்கவில்லை. இதனால் மக்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர்.மர்ம மனிதன் பீதியால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,