அணைகளில் நீர்மட்டம் சரிகிறது : கோடையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
கோவை: தமிழகத்தில் கோடையின் உக்கிரம் துவங்கும் முன்பே பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் வழக்கமாக வெயில் தாக்கம் ஏப்ரலில்தான் அதிகரிக்கும். இந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. சென்னை தவிர கோவை, திருச்சி, வேலூர், மதுரை போன்ற நகரங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டு விட்டது. தமிழகத்தில் அதிகரித்து வரும் வெயிலால் பெரும்பாலான அணைகளில் நீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது. பாசன தேவைகள் மட்டுமில்லாமல் குடிநீர் தேவைக்கும் அணைகளை நம்பியே இருக்கவேண்டியுள்ளது. தமிழகத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக கருதப்படும் மேட்டூர், பவானிசாகர் திருமூர்த்தி, அமராவதி, வைகை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர் அணைகளில் கடந்தாண்டை காட்டிலும் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேட்டூர், பவானிசாகர் போன்ற அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவது கோடையில் ஏற்படப்போகும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான அறிகுறி என்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். தற்போதுள்ள நீர்மட்ட நிலை மற்றும் பருவநிலை மாற்றத்தை ஒப்பிடுகையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாவிட்டால் அடுத்து வரும் நாட்களில் நீர் மட்டம் மேலும் 20 முதல் 40 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. மார்ச் முதல் மே மாதம் முடிய பருவமழை முன் பருவ காலமாகும். இந்த காலத்தில் மார்ச் மாதத்தில் கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் சராசரியாக 15 மி.மீ மழை எதிர்பார்க்கப்படும். ஆனால் இந்த முறை மார்ச் மாதத்தில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. இந்த கோடையில் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/28/2012 6:17:36 PM
-Updated 3/28/2012 5:46:03 PM
-Updated 3/28/2012 2:58:23 PM
-Updated 3/28/2012 1:02:54 PM
-Updated 3/27/2012 6:09:14 PM
-Updated 3/27/2012 6:08:57 PM
-Updated 3/27/2012 4:30:11 PM
-Updated 3/27/2012 3:46:16 PM
-Updated 3/27/2012 3:33:59 PM
-Updated 3/27/2012 3:32:52 PM
-Updated 3/27/2012 3:32:43 PM
-Updated 3/25/2012 5:38:34 PM
-Updated 3/25/2012 5:38:14 PM
-Updated 3/24/2012 4:30:58 PM
-Updated 3/24/2012 4:29:52 PM