கூடுவாஞ்சேரி : உ.பி.யை சேர்ந்தவர் விஷான் (22). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இவரும், இவருடன் படித்து வரும் உ.பி.யை சேர்ந்த நண்பருடன், இன்று அதிகாலை தாம்பரத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வண்டலூர் மேம்பாலத்தில் ஏற முயன்றபோது முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது, பைக் மோதியது. இதில், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே விஷான் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து ஓட்டேரி போலீஸ் எஸ்ஐ ரகுநாதன், சம்பவ இடத்துக்கு வந்தார். விஷானின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும், படுகாயம் அடைந்த அவரது நண்பரை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/14/2012 4:50:16 PM
-Updated 3/14/2012 4:47:39 PM
-Updated 3/14/2012 3:16:05 PM
-Updated 3/14/2012 2:35:00 PM
-Updated 3/14/2012 2:34:51 PM
-Updated 3/14/2012 2:29:52 PM
-Updated 3/14/2012 2:20:44 PM
-Updated 3/14/2012 2:20:26 PM
-Updated 3/14/2012 2:20:10 PM
-Updated 3/14/2012 2:19:59 PM
-Updated 3/14/2012 2:19:49 PM
-Updated 3/14/2012 2:16:40 PM
-Updated 3/13/2012 3:45:32 PM
-Updated 3/13/2012 3:03:00 PM
-Updated 3/13/2012 2:52:56 PM