2012
13
Mar
திருத்தணி துணை மின் நிலையங்களில் மீட்டர் தட்டுப்பாடு நிலவுவதால் விண்ணப்பித்தவர்கள் காத்திருப்பு


திருத்தணி : திருத்தணி பகுதி துணை மின்நிலையங்களில் ரீடிங் மீட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்கள் காத்திருக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய திருத்தணி, கே.ஜி.கண்டிகை, பூனிமாங்காடு, கே.கே.சத்திரம், வெடியங்காடு புதூர், அத்திமாஞ்சேரி பேட்டை பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து சுமார் 200க்கு அதிகமான கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. புதிய இணைப்பு வழங்கப்படுகிறது. வீடு, கடை கட்டுபவர்கள் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு, நவம்பர் மாதம் வரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே மின் இணைப்பும் அத்துடன் அரசு சார்பில், ரீடிங் மீட்டரும் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்துக்கு பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு இணைப்பு வழங்கவில்லை. பல மாதங்களாக காத்திருக்கின்றனர். ‘அரசிடம் இருந்து ரீடிங் மீட்டர் வரவில்லை. இதனால்தான் புதிய இணைப்பு கொடுக்க முடியவில்லைÕ என்று மின்வாரிய தரப்பில் கூறுகின்றனர். ‘விண்ணப்பம் கொடுத்துவிட்டு பல மாதம் காத்திருக்கிறோம். இதனால் வீடு கட்டியவர்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். ரீடிங் மீட்டர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்று கூறுகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,