10 மணி நேர மின் வெட்டை கண்டித்து 10 மணி நேர மின் வெட்டை கண்டித்து
பள்ளிப்பட்டு : திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இங்கு ஒரு மாதமாக தொடர்ந்து 10 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதனால், விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், நெசவாளர்களுக்கு வருமானம் பாதித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர். சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இப்பகுதி திமுகவினர், மின்வெட்டை கண்டித்து, அம்மையார்குப்பம் மின்வாரிய அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பூ.கன்னியப்பன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர்.ராமலிங்கம், பி.வடிவேல் முன்னிலை வகித்தனர். Ôசீரான மின்சாரம் வழங்க வேண்டும். மின்வெட்டு நேரத்தை குறைக்க வேண்டும்Õ என்று கோஷம் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அம்மையார்குப்பம் ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தி, திமுக நிர்வாகிகள் சுந்தரம், ரவி, சிங்காரம், ரவி, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/14/2012 4:50:16 PM
-Updated 3/14/2012 4:47:39 PM
-Updated 3/14/2012 3:16:05 PM
-Updated 3/14/2012 2:35:00 PM
-Updated 3/14/2012 2:34:51 PM
-Updated 3/14/2012 2:29:52 PM
-Updated 3/14/2012 2:20:44 PM
-Updated 3/14/2012 2:20:26 PM
-Updated 3/14/2012 2:20:10 PM
-Updated 3/14/2012 2:19:59 PM
-Updated 3/14/2012 2:19:49 PM
-Updated 3/14/2012 2:16:40 PM
-Updated 3/13/2012 3:45:32 PM
-Updated 3/13/2012 3:03:00 PM
-Updated 3/13/2012 3:02:31 PM