ஆவடி : ஆவடி அருகே கடைக்கு சென்ற புது மணப்பெண் திடீரென மாயமானார். அவரை யாராவது கடத்தினார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். ஆவடியை அடுத்த கோவில்பதாகை நாவிதர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (28). திருவொற்றியூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார். இவருக்கும் பெரியபாளையத்தை சேர்ந்த தனலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் நடந்தது. கடந்த 21-ம் தேதி கடைக்கு சென்ற தனலட்சுமி, பின்னர் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் அவரை பல இடத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் பிரகாஷ் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தனலட்சுமியை யாராவது கடத்தினார்களா அல்லது அவரே எங்காவது சென்றாரா என விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/28/2012 4:03:42 PM
-Updated 2/28/2012 4:03:18 PM
-Updated 2/28/2012 4:02:35 PM
-Updated 2/28/2012 4:02:14 PM
-Updated 2/28/2012 4:00:37 PM
-Updated 2/28/2012 3:11:28 PM
-Updated 2/28/2012 3:10:53 PM
-Updated 2/28/2012 3:08:55 PM
-Updated 2/28/2012 2:49:13 PM
-Updated 2/28/2012 2:45:14 PM
-Updated 2/28/2012 2:44:08 PM
-Updated 2/28/2012 2:36:17 PM
-Updated 2/28/2012 2:36:07 PM
-Updated 2/28/2012 2:35:57 PM
-Updated 2/28/2012 2:35:47 PM