நன்மங்கலம் பள்ளியில் 94 பேருக்கு கல்வி நிதி : அமைச்சர் வழங்கினார்
வேளச்சேரி : வேளச்சேரி அடுத்த நன்மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பத்திரம் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை ஆசிரியை பேபி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ராணி முன்னிலை வகித்தார். அமைச்சர் சின்னையா கலந்துகொண்டு 94 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பத்திரம் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல சலுகைகளை வழங்குகிறது. அடுத்த கல்வி ஆண்டு முதல் கூடுதலாக ஜாமன்ட்ரி பாக்ஸ், கலர் பென்சில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது’’ என்றார். விழாவில் கே.பி.கந்தன் எம்எல்ஏ, ஒன்றியக்குழு தலைவர் என்.சி.கிருஷ் ணன், மாவட்ட கவுன்சிலர் தனபால், ஊராட்சி தலைவர் செல்வராணி சுந்தர், துணைத் தலைவர் கிரி, செயலர் நாராயணன், அதிமுக ஊராட்சி செயலாளர் என்.ஆர்.கிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் சற்குணம் நன்றி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 4:11:09 PM
-Updated 12/1/2025 3:40:06 PM
-Updated 12/1/2025 3:10:47 PM
-Updated 12/1/2025 2:44:37 PM
-Updated 12/1/2025 2:44:24 PM
-Updated 12/1/2025 2:44:05 PM
-Updated 12/1/2025 2:43:29 PM
-Updated 12/1/2025 2:43:13 PM
-Updated 12/1/2025 1:59:00 PM
-Updated 11/30/2011 5:34:58 PM
-Updated 11/30/2011 5:34:44 PM
-Updated 11/30/2011 5:34:15 PM
-Updated 11/30/2011 4:23:06 PM
-Updated 11/30/2011 4:22:34 PM
-Updated 11/30/2011 3:35:21 PM