அண்ணாநகர் : திருமங்கலம் கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாநகர் அடுத்த திருமங்கலம் என்விஎன் நகர் 14வது தெருவில் தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று இரவு 8.30 மணி அளவில் கோயில் கிரில் கேட்டை பூட்டி சென்றனர். இன்று காலை கோயிலை சுத்தம் செய்ய ஒரு பெண் வந்தார். அப்போது கோயில் உண்டியலை காணவில்லை. இதுபற்றி கோயில் நிர்வாகி ராஜசேகருக்கு தகவல் கொடுத்தார். அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வந்து பார்த்தபோது, கோயிலுக்குள் இன்னொரு இடத்தில் வைத்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. சில்லரை காசுகள் சிதறி கிடந்தது. கொள்ளையரை போலீசார் தேடுகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 4:11:09 PM
-Updated 12/1/2025 3:40:06 PM
-Updated 12/1/2025 3:10:47 PM
-Updated 12/1/2025 2:44:37 PM
-Updated 12/1/2025 2:44:24 PM
-Updated 12/1/2025 2:44:05 PM
-Updated 12/1/2025 2:43:29 PM
-Updated 12/1/2025 2:43:13 PM
-Updated 12/1/2025 1:59:00 PM
-Updated 11/30/2011 5:34:58 PM
-Updated 11/30/2011 5:34:44 PM
-Updated 11/30/2011 5:34:29 PM
-Updated 11/30/2011 5:34:15 PM
-Updated 11/30/2011 4:23:06 PM
-Updated 11/30/2011 3:35:21 PM