பல்லாவரம் நகராட்சி தலைவர் அறை மாற்றம் 1 லட்சத்தை வீணடிப்பதா ? பொதுமக்கள் ஆதங்கம் !
தாம்பரம் : பல்லாவரம் நகராட்சி முதல் கூட்டம் தலைவர் நிசார் அகமது தலைமையில் மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒன்றில், புதிதாக பொறுப்பேற்ற நிசார் அகமதுவின் அறை பொறியாளர் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பொறியாளர் பிரிவு அறை ஏற்கனவே தலைவராக இருந்த இ.கருணாநிதி அறைக்கு மாற்றப்பட்டது. இதற்கு ரூ.11 லட்சம் செலவானது என தெரிவிக்கப்பட்டது. இது வீண் செலவு என்று கூறி திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
‘நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணி பயன்பாட்டுக்கு வரவில்லை, குப்பைகள் முறையாக அள்ளவில்லை, குடிநீர் விநியோகம் இல்லை, மழையால் சேதமடைந்த சாலைகளை செப்பனிடவில்லை, ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை, குரோம்பேட்டை நியூ காலனியில் உள்ள எரிவாயு தகன மேடை பழுதடைந்துள்ளது, பல்லாவரம் பஸ் நிலைய பணி கிடப்பில் உள்ளது, அஸ்தினாபுரம் அரசு மேல்நிலை பணி பாதியில் கிடக்கிறது என்பது உள்ளிட்ட ஏராளமான வேலைகள் பணம் இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. தலைவர் அறையை மாற்றுவதற்கு செலவழித்த பணத்தை இந்த திட்டங்களை நிறைவேற்ற செலவழித்திருக்கலாம். தலைவர் அறைக்கான சீரமைப்பு தேவைதானா, அதுவும் டெண்டர் விடாமல் நடந்துள்ளது. இதற்கு முறையான விசாரணை தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2011 4:55:48 PM
-Updated 11/27/2011 4:55:36 PM
-Updated 11/27/2011 1:57:18 PM
-Updated 11/27/2011 1:57:09 PM
-Updated 11/26/2011 3:28:02 PM
-Updated 11/26/2011 3:21:17 PM
-Updated 11/26/2011 3:04:27 PM
-Updated 11/26/2011 2:48:54 PM
-Updated 11/26/2011 2:40:15 PM
-Updated 11/26/2011 2:39:57 PM
-Updated 11/26/2011 2:37:57 PM
-Updated 11/26/2011 2:30:47 PM
-Updated 11/26/2011 2:14:16 PM
-Updated 11/26/2011 2:14:03 PM
-Updated 11/26/2011 2:10:34 PM