செங்குன்றம் பகுதி ரைஸ் மில்லில் 47 கொத்தடிமைகள் மீட்பு
புழல் : சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் கொத்தடிமைகள் இருப்பதாக பொன்னேரி ஆர்டிஓ கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆர்டிஓ, தாசில்தார் அந்தோணி, துணை தாசில்தார் தமிழ்ச்செல்வன் ஆகியோர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அம்பேத்கர் நகரில் உள்ள ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 11 குடும்பத்தை சேர்ந்த 15 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் என 47 பேரை மீட்டனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் தாதங்குப்பம், திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் விடுதலை சான்றிதழ் வழங்கினர். பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். தாசில்தார் அந்தோணி கொடுத்த புகாரின்பேரில், அரிசி ஆலையில் கொத்தடிமைகள் இருந்தது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2011 4:55:48 PM
-Updated 11/27/2011 4:55:36 PM
-Updated 11/27/2011 1:57:18 PM
-Updated 11/27/2011 1:57:09 PM
-Updated 11/26/2011 3:28:02 PM
-Updated 11/26/2011 3:21:17 PM
-Updated 11/26/2011 3:04:27 PM
-Updated 11/26/2011 2:48:54 PM
-Updated 11/26/2011 2:40:15 PM
-Updated 11/26/2011 2:39:57 PM
-Updated 11/26/2011 2:37:57 PM
-Updated 11/26/2011 2:30:47 PM
-Updated 11/26/2011 2:14:16 PM
-Updated 11/26/2011 2:14:03 PM
-Updated 11/26/2011 2:10:34 PM