கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு டிக்கெட் எடுக்காத பயணிகள்!
சென்னை: பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் டிக்கெட் எடுக்க மறுத்ததால் திருவான்மியூரில் பரபரப்பு ஏற்பட்டது. திருவான்மியூர் - திருவொற்றியூர் டோல்கேட் இடையே 6-இ என்ற மாநகர பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ், இன்று காலை திருவான்மியூரில் இருந்து புறப்பட்டது. 50-க்கும் அதிகமான பயணிகள் பஸ்சில் ஏறினர். அவர்களில் 4 பயணிகள் மட்டுமே டிக்கெட் எடுத்தனர். கட்டணம் அதிகமாக இருந்ததால், மற்ற யாரும் டிக்கெட் எடுக்கவில்லை.
கண்டக்டர் எவ்வளவோ எடுத்து கூறியும், அவர்கள் டிக்கெட் எடுக்க மறுத்துவிட்டனர். ‘‘டிக்கெட் எடுக்க மாட்டோம். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்’’ என்று கூறிவிட்டனர். இதனால் பயணிகளுக்கும், கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டிக்கெட் எடுக்காதவர்களில் பலர் அடையார், பட்டினப்பாக்கம், மெரினா பீச் ஆகிய ஸ்டாப்களில் இறங்கி சென்றுவிட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/21/2011 4:47:47 PM
-Updated 11/21/2011 4:00:07 PM
-Updated 11/21/2011 2:56:11 PM
-Updated 11/21/2011 2:54:10 PM
-Updated 11/21/2011 2:51:14 PM
-Updated 11/21/2011 2:50:35 PM
-Updated 11/21/2011 2:49:54 PM
-Updated 11/21/2011 2:47:19 PM
-Updated 11/21/2011 2:33:47 PM
-Updated 11/21/2011 2:33:35 PM
-Updated 11/21/2011 2:30:14 PM
-Updated 11/21/2011 2:04:42 PM
-Updated 11/21/2011 12:54:56 PM
-Updated 11/20/2011 4:03:35 PM
-Updated 11/20/2011 4:03:26 PM