2011
18
Nov
வரலாற்றில் முதன் முறையாக புழல் ஏரி 22 நாட்கள் திறப்பு!


புழல்: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது நீர் இருப்பு 3004 மில்லியன் கன அடி. வினாடிக்கு மழைநீர் வரத்து 376 கன அடியாக உள்ளது. மதகு வழியாக வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரிக்கரையில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 881 மில்லியன் கன அடியில், 878 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 300 கன அடி வெளியேற்றப்பட்டு, சோழவரம் கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு செல்கிறது. சோழவரம் பகுதியில் 10 மி. மீ. மழை பதிவாகியுள்ளது.  

தொடர் மழை காரணமாக கடந்த 28-ம் தேதி புழல் ஏரி திறக்கப்பட்டது. இன்றுவரை தொடர்ந்து 22 நாட்கள் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ‘‘இதுவரை இவ்வளவு நாட்கள் தொடர்ச்சியாக புழல் ஏரி திறக்கப்பட்டதில்லை. இதுதான் முதல் தடவை’’ என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,