2011
15
Nov
கோயம்பேடு மார்க்கெட்டில் கீரைகள் விலை உயர்வு!


அண்ணாநகர்: மழையால் வரத்து குறைந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் கீரைகள் விலை இரு மடங்கு உயர்ந்துள் ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வேலூர், காட்பாடி, குடியாத்தம், சோழிங்கர், அரக்கோணம், வாலாஜா, திருவண்ணாமலை, பெரியபாளையம், கவரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கீரைகள் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வருகிறார்கள். வழக்கமாக மொத்த விலைக் கடைகளில் கீரை ஒரு கட்டு ரூ. 3ல் தொடங்கி அதிகபட்சம் ரூ. 5 வரை விற்கப்படுகிறது.

 தொடர் மழை காரணமாக கீரை தோட்டங்களில் மழைநீர் தேங்கி சேதம் ஏற்பட்டது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கீரை வரத்து குறைந்தது. இதனால் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இன்று காலை மார்க்கெட்டில் அரை கீரை, முளை கீரை, சிறு கீரை, பாலா கீரை, பசலை கீரை, இவை ஒவ்வொன்றும் கட்டு ரூ.10 க்கும், மணத்தக்காளி கீரை கட்டு ரூ. 8க்கும், அகத்தி கீரை ரூ. 7க்கும், புளிச்சகீரை ரூ. 9 க்கும், பொன்னாங்கன்னி ரூ. 7க்கும் விற்கப்பட்டது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,