|
|||||
|
2011
12
Jan ஊத்துக்கோட்டை - பெரியபாளையத்தை அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தன் (58). அதிமுக கிளை தலைவர். நேற்று முன்தினம் இரவு கன்னிகைப்பேரில் நடந்த தெருமுனைகூட்டத்தில் பங்கேற்றபின் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு வெளியே உள்ள கொட்டகையில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் வந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சம்பந்தனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். காயம் அடைந்த சம்பந்தனை சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். புகாரின் பேரில் பெரியபாளையம் சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்தார். முன்விரோதத்தில் யாராவது கத்தியால் குத்தினார்களா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
|
|
-Updated 1/12/2025 2:33:59 PM
-Updated 1/12/2025 2:33:43 PM
-Updated 1/12/2025 2:33:30 PM
-Updated 1/12/2025 2:33:20 PM
-Updated 1/12/2025 2:33:04 PM
-Updated 1/6/2025 4:56:26 PM
-Updated 1/6/2025 4:55:49 PM