தங்கபாலுவை எதிர்த்து மறியல் : 11 பேருக்கு அபராதம்!
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் தங்கபாலு போட்டியிட்டார். இதற்கு காங்கிரசார் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஏப்ரல் 9ம் தேதி, மயிலாப்பூர் லஸ் கார்னரில் தங்கபாலுவின் எதிர்ப்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, போட்டி வேட்பாளர் சிவகாமி, அன்பழகன், தீனன், வைரராஜ் உட்பட 11 பேர் மீது மயிலாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி மலர்விழி முன்னிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களை பார்த்து, ‘‘போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நடுரோட்டில் நின்றுக்கொண்டு, பணம் பட்டுவாடா செய்த காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலுவை கைது செய்! என்று கோஷம் போட்டது உண்மைதானா?’’ என்று நீதிபதி கேட்டார். குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொள்வதாக கூறினர். இதையடுத்து, 11 பேருக்கும் தலா ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/5/2025 11:36:01 AM
-Updated 11/5/2025 11:35:42 AM
-Updated 11/5/2025 11:34:14 AM
-Updated 11/5/2025 9:48:33 AM
-Updated 11/5/2025 9:48:03 AM
-Updated 11/4/2025 5:29:11 PM
-Updated 11/4/2025 10:40:16 AM
-Updated 11/4/2025 10:39:56 AM
-Updated 11/4/2025 10:39:33 AM
-Updated 11/4/2025 10:39:18 AM
-Updated 11/4/2025 10:38:32 AM
-Updated 11/4/2025 10:38:14 AM
-Updated 11/3/2025 10:54:54 AM
-Updated 11/3/2025 10:54:27 AM
-Updated 11/3/2025 10:53:26 AM