|
|||||
|
2011
12
Jan திருப்பதி, - தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நிருபர்களிடம் கூறியது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி முதல் பெருமாளுக்கு நடைபெறும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை நடைபெற்று வருகிறது. மார்கழி மாதம் முடிய உள்ளதால் வரும் 15ம் தேதியுடன் ஆண்டாள் திருப்பாவை முடிவடைகிறது. 16ம் தேதி முதல் சுப்ரபாத சேவை மீண்டும் நடைபெறுகிறது. ஏழுமலையான் கோயிலில் வரும் 16ம் தேதி ஆண்டாள் திருமண உற்சவம் நடைபெற உள்ளது. இதனால் 16ம் தேதி நடைபெற உள்ள அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
|
|
-Updated 1/12/2025 4:00:58 PM
-Updated 1/12/2025 2:33:43 PM
-Updated 1/12/2025 2:33:30 PM
-Updated 1/12/2025 2:33:20 PM
-Updated 1/12/2025 2:33:04 PM
-Updated 1/6/2025 4:56:26 PM
-Updated 1/6/2025 4:55:49 PM