சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வணிக வளர்ச்சி துறை பொது மேலாளர் எஸ். செல்வன் ராஜதுரை விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனமும் இணைந்து ஆயுள் காப்பீட்டு வணிகம் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் எல்ஐசி காப்பீட்டு திட்டங்களை வங்கியின் 243 கிளைகள் வாயிலாக சந்தைப்படுத்த முடியும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் காப்பீட்டு வசதியை எளிதாக பெறலாம். இதன் தொடக்க விழா கடந்த 29ம் தேதி சென்னையில் நடைபெற்றது. எல்ஐசி நிர்வாக இயக்குனர் ஏ.கே.தாஸ் குப்தா, வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.கே.ஜெகந்நாதன் மற்றும் வாடிக்கையாளர் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/3/2025 10:54:54 AM
-Updated 11/3/2025 10:54:27 AM
-Updated 11/3/2025 10:53:26 AM
-Updated 11/3/2025 10:53:10 AM
-Updated 11/3/2025 10:52:44 AM
-Updated 11/3/2025 10:52:11 AM
-Updated 11/2/2025 3:57:27 PM
-Updated 11/2/2025 3:25:43 PM
-Updated 11/2/2025 3:25:16 PM
-Updated 11/2/2025 3:24:47 PM
-Updated 11/2/2025 3:23:02 PM
-Updated 11/2/2025 10:30:50 AM
-Updated 11/2/2025 10:29:22 AM
-Updated 11/2/2025 10:28:02 AM
-Updated 11/2/2025 10:27:32 AM