வங்கி கடன் மோசடி அதிமுக மாஜி அமைச்சர் உள்பட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு : முன்ஜாமீன் கேட்டு 4 பேர் ஐகோர்ட்டில் மனு
மதுரை : இல்லாத கம்பெனி பெயரில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் உள்பட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், முன்ஜாமீன் கேட்டு 4 பேர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். நெல்லை பாளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் போலி ஆவணங்களை வைத்து கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளதாக சிபிஐக்கு புகார் சென்றது. சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வங்கி விதிகளை மீறி பலருக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக கடன் வழங்கியிருப்பது தெரியவந்தது. இந்த மோசடிக்கு வங்கியின் முதன்மை மேலாளர் பாலசுப்பிரமணியன் உடந்தையாக இருந்துள்ளார். செண்பகமூர்த்தி என்பவர் தனது ஸ்டீல் கம்பெனி பெயரில் வங்கி கணக்கு துவங்கி, சில நாட்களில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவர் கொடுத்த முகவரியில் அப்படி ஒரு கம்பெனியே இல்லை. ஆனால், அவருக்கு ரூ.75 லட்சம் கடன் வழங்கப்பட்டது. அந்த தொகை அதிமுக முன்னாள் அமைச்சர் அம்மமுத்துபிள்ளை, கல்யாணசுந்தரம் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. இதுதவிர மேலும் பலருக்கு போலி ஆவணங்களை வைத்து கடன் வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பாலசுப்பிரமணியன், செண்பகமூர்த்தி, அம்மமுத்துபிள்ளை, கல்யாணசுந்தரம், சாகுல்அமீது, அவரது மனைவி சகீனா, சிவசுப்பிரமணியம், ஆழ்வார், ஆறுமுகம், சண்முகம் உள்பட 14 பேர் மீது சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் 14 பேரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் செண்பகமூர்த்தி, சிவசுப்பிரமணியம், அவரது மனைவி ஆழ்வார் மற்றும் சண்முகம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/3/2025 10:54:54 AM
-Updated 11/3/2025 10:54:27 AM
-Updated 11/3/2025 10:53:26 AM
-Updated 11/3/2025 10:53:10 AM
-Updated 11/3/2025 10:52:44 AM
-Updated 11/3/2025 10:52:11 AM
-Updated 11/2/2025 3:57:27 PM
-Updated 11/2/2025 3:25:43 PM
-Updated 11/2/2025 3:25:16 PM
-Updated 11/2/2025 3:24:47 PM
-Updated 11/2/2025 3:23:02 PM
-Updated 11/2/2025 10:30:50 AM
-Updated 11/2/2025 10:29:22 AM
-Updated 11/2/2025 10:28:02 AM
-Updated 11/2/2025 10:27:32 AM