சென்னை: நடிகர் தியாகு இன்று அதிமுகவில் சேர்ந்தார். பாலைவன சோலை, கிழக்கு வாசல், வெடிகுண்டு முருகேசன், தில்லாலங்கடி உள்பட 200க் கும் அதிகமான திரைப்படங்களில் நகைச்சுவை, குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர் நடிகர் தியாகு. இவர் திமுகவில் உறுப்பினராக இருந்து தேர்தல் நேரங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் திமுகவில் இருந்து கடந்த வாரம் விலகினார்.
இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். இதுபற்றி தியாகு கூறுகையில், ÔÔதிமுகவில் இப்போது வந்த குஷ்பு, வடிவேலு போன்றவர்களுக்கு தான் மவுசு. கிளாமருக்குதான் மதிப்பு. எனக்கு எந்த மரியாதையும் கிடைக்கவில்லை. அதிமுகவில் சேர்ந்த எஸ்.எஸ்.சந்திரனை அம்மா எம்.பி. ஆக்கினார். ராதா ரவியை எம்.எல்.ஏ. ஆக்கினார். பதவி கிடைக்கும் என்று செல்லவில்லை. அவரவர்களுக்கு உரிய கவுரவம் தருகிறார் அம்மா. அதனால் அதிமுகவில் சேர்கிறேன் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/19/2011 2:56:26 PM
-Updated 10/19/2011 11:42:37 AM
-Updated 10/19/2011 9:56:52 AM
-Updated 10/19/2011 9:56:06 AM
-Updated 10/19/2011 9:55:49 AM
-Updated 10/19/2011 9:55:26 AM
-Updated 10/19/2011 9:54:38 AM
-Updated 10/19/2011 9:54:23 AM
-Updated 10/19/2011 9:54:03 AM
-Updated 10/19/2011 9:53:39 AM
-Updated 10/19/2011 9:53:03 AM
-Updated 10/19/2011 9:52:43 AM
-Updated 10/19/2011 9:52:19 AM
-Updated 10/18/2011 2:56:59 PM
-Updated 10/18/2011 2:56:43 PM