வேலூர்:- வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினியை அவரது கணவர் முருகன் இன்று சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட நளினி, பின்னர் கடந்த 7ம் தேதி வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கு மீண்டும் மாற்றப்பட்டார். பெண்கள் சிறையில் இருக்கும் நளினியை அவரது கணவர் முருகன் 2 வாரத்துக்கு ஒருமுறை நேரில் சந்தித்து பேச அனுமதிக்கப்படுகிறது.
அதன்படி இன்று காலை ஆயுதப்படை டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் இருந்து முருகன், வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காலை 7.30 மணி முதல் 8.15 மணி வரை நளினியை சந்தித்து பேசினார். பின்னர் மீண்டும் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/26/2011 4:45:17 PM
-Updated 9/26/2011 4:43:21 PM
-Updated 9/26/2011 2:44:12 PM
-Updated 9/26/2011 2:43:59 PM
-Updated 9/26/2011 12:27:36 PM
-Updated 9/26/2011 12:26:05 PM
-Updated 9/26/2011 12:25:52 PM
-Updated 9/26/2011 12:21:25 PM
-Updated 9/26/2011 12:21:12 PM
-Updated 9/26/2011 12:20:59 PM
-Updated 9/26/2011 12:20:28 PM
-Updated 9/26/2011 12:19:11 PM
-Updated 9/26/2011 12:18:38 PM
-Updated 9/26/2011 12:17:23 PM
-Updated 9/26/2011 10:19:01 AM