வெட்டோரிக்கு ஆபரேஷன் 17 May 2025 நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வெட்டோரி, ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நாடு திரும்பிய அவர் காயத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது வலது காலில் விரைவில் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.
முற்றும்.
ஹீரோ கார்னர் 12 May 2025 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற பெங்களூர் பவுலர் ஸ்ரீநாத் அரவிந்த் கூறுகையில், என்னை இந்த அளவிற்கு உயர்த்திய எனது பயிற்சியாளர்கள், சக வீரர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல் 2 ஓவர்களில் நான் அடுத்தடுத்து தவறு செய்தேன். ஆனால் கடைசி 2 ஓவரில் ஆட்டத்தை என் பக்கம் திருப்பினேன். இன்று எனக்கு மிகப்பெரிய நாளாக அமைந்தது என்றார்.
முற்றும்.
கேப்டன்ஸ் கார்னர் : வார்ன் 12 May 2025 வார்ன் : கடந்த 4 ஐபிஎல் சீசன்களிலும் இங்கு அற்புதமாக விளையாடி இருக்கிறோம். ரசித்து ஆடினோம். ஆனால் ஜெய்ப்பூரில் நான் ஆடும் கடைசி ஆட்டத்தை மகிழ்ச்சியாக முடிக்காத வருத்தம் உள்ளது. நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். அதோடு சில கேட்சுகளையும் தவறவிட்டோம். ஆனால் இந்தியா முழுவதும் பல இளம் வீரர்களை நாங்கள் வளர்த்திருக்கிறோம். எனக்கு தெரிந்த அனுபவங்களை அனைத்து இளம் வீரர்களுக்கும் கற்று கொடுத்திருக்கிறேன். சிலர் ஆழமாக கற்றனர். சிலர் புறக்கணித்தனர். இன்னும் சில ஆட்டங்கள் உள்ளன. அதை வெற்றியோடு எதிர்கொள்வோம்.
முற்றும்.
கேப்டன்ஸ் கார்னர் : கில்கிறிஸ்ட் 07 May 2025 கில்கிறிஸ்ட் : கெய்லின் ஆட்டம் பிரமிப்பாக இருந்தது. தனிப்பட்ட நபராக அதிரடியில் மிரட்டி ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்து விட்டார். அவருடைய அதிரடியை பார்த்து அதிர்ந்து விட்டோம். ஒருகட்டத்தில் அவர்கள் 230 ரன்களை கடப்பார்கள் என அஞ்சினோம். ஆனால் அது நடக்கவில்லை. இன்னும் 2 நாட்களில் பெங்களூர் அணியுடன் மீண்டும் மோத உள்ளோம். அதில் பதிலடி கொடுக்க முயற்சிப்போம்.
முற்றும்.
கேப்டன்ஸ் கார்னர் : 07 May 2025 வெட்டோரி: இதுதான் மிகச்சிறந்த 20-20 ஆட்டம். கெய்ல் சதம் விளாசியது வியக்கத்தக்க வகையில் இருந்தது. இதுபோன்ற ஆடுகளங்களில் ரன்குவிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அணியின் பீல்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கில்கிறிஸ்டை முதல் பந்திலேயே ரன் அவுட் ஆக்கியதுமே எங்களது வேலை சுலபமாகிவிட்டது. அரவிந்த் பந்துவீச்சு அருமையாக இருந்தது.
முற்றும்.
கேப்டன் கார்னர்ஸ் : சங்ககரா 06 May 2025 சங்ககரா : முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் சேவாக் அதிரடியாக ஆடி ஆட்டத்தை எங்கள் கையில் இருந்து பறித்து விட்டார். அவர் கொடுத்த 2 கேட்சுகளை பிடிக்க தவறிவிட்டோம். இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக தான் செயல்பட்டார்கள். 2 கேட்சுகளை தவற விட்டதே தோல்விக்கு காரணம். சேவாக் அருமையாக ஆடினார். முதல் 6 ஓவரில் அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடி ரன் சேர்த்தார். நாங்கள் கொடுத்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்தி மிரட்டி விட்டார்.
முற்றும்.
கேப்டன் கார்னர்ஸ் : சேவாக் 06 May 2025 சேவாக் : வார்னர், நான், கில்கிறிஸ்ட், சச்சின் உள்ளிட்ட வீரர்கள் அதிக
ஓவர்களை எதிர்கொண்டால் எதையும் சாதிக்க முடியும். ஸ்டெய்ன், இஷாந்த்
ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
கடந்த முறை இங்கு 94 ரன்களில் ஆட்டமிழந்தேன். அதனால் இம்முறை சதமடிக்கும்
வாய்ப்பை தவறவிட்டு விடக்கூடாது என நினைத்தேன். கடைசி வரை நான் களத்தில்
நின்றால் நிச்சயம் அணி வெற்றி பெறும்.
முற்றும்.
கேப்டன்ஸ் கார்னர் : சேவாக் 29 Apr 2025 சேவாக் : எங்களுடைய வியூகம் எந்த இடத்திலும் பலனளிக்காமல் போய்விட்டது. அணியில் போதுமான பேட்ஸ்மேன்கள் இருந்தும் யாரும் பொறுப்புடன் ஆடி ஆட்டத்தை வெற்றிக்கு அழைத்து செல்லவில்லை. 150 முதல் 160 ரன்கள் வரை கூட எளிதாக எடுக்கக்கூடியது தான். தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துள்ளதால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். எனினும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு மங்கிவிடவில்லை. முடியாதது என்று எதுவுமே இல்லை. இரண்டு மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால் நிலைமை மாறும். 7 ஆட்டங்களில் நான் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளேன். வரும் ஆட்டங்களில் 12 முதல் 15 ஓவர் வரை களத்தில் நிற்க முயற்சி செய்வேன்.
முற்றும்.
கேப்டன்ஸ் கார்னர் - காம்பீர் 29 Apr 2025 காம்பீர் : ஒட்டுமொத்த அணியாக சிறப்பாக ஆடி வெற்றியை பெற்றுள்ளோம். பவுலிங், பீல்டிங் அருமையாக இருந்தது. இந்த வெற்றி திருப்தி அளிக்கிறது. மனோஜ் திவாரி அருமையாக ஆடி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். எல்லா புகழும் அவரையே சேரும். இதே போன்று சிறப்பான ஆட்டத்தை எல்லா வீரர்களும் வெளிப்படுத்தினால் அணி வலுப்பெறும். குறைவான ஸ்கோரை எடுத்த போதிலும் வெற்றி பெற்றது அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
முற்றும்.
ஆள்கடத்தல் கிரிக்கெட் வீரர் கைது 28 Apr 2025 இந்திய கிரிக்கெட் அணியில் 1999 முதல் 2000ம் ஆண்டு வரையில் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் ஜேக்கப் மார்ட்டின். தற்போது 39வயதான இவர் கடந்த 2003ம் ஆண்டு போலி விசா மூலம் ஆட்களை இங்கிலாந்துக்கு கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டதால் தலைமறைவான அவரது தலைக்கு டெல்லி போலீஸ் ரூ. 25 ஆயிரம் பரிசு அறிவித்தது. இந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முற்றும்.
பிளட்சருக்கு கபில் எதிர்ப்பு 28 Apr 2025 இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக 1983 உலககோப்பையில் விளையாடிய ஜிம்பாப்பே கேப்டன் டங்கன் பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு 1983ல் உலககோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “ யார் இந்த பிளட்சர்?, இந்தியர்கள் யாரும் இல்லையா?, இதற்கு முன் வெங்கடேஷ்பிரசாத், ராபின் சிங் ஆகியோர் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக திறம்பட பணியாற்றவில்லையா?, அவர்கள் தலைமையில் நாம் 2020 உலக கோப்பையை வெற்றிபெறவில்லையா என ஆக்ரோஷமாக கேட்டுள்ளார்.
முற்றும்.
ஒரிசா ஐபிஎல் தொடக்கம் 26 Apr 2025 ஒரிசா கிரிக்கெட் சங்கம் சார்பில் தனி ஐபிஎல் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒரிசா பிரிமியர் லீக்(ஓபிஎல்) என்று பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வீரர்கள் ஏலத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுமார் 20 வீரர்கள் வரை ஒவ்வொரு அணி உரிமையாளர்களும் வீரர்களை தேர்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் மே மாதம் 2வது வாரம் தொடங்க உள்ளது.
முற்றும்.
இந்திய பயிற்சியாளர் பிளவர் இல்லை 26 Apr 2025 இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து பயிற்சியாளரும், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரருமான ஆன்டி பிளவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து புதிதாக அவருக்கு 3 ஆண்டு ஒப்பந்தத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்க முன்வந்தது. இதில் இன்னும் பிளவர் கையெழுத்து போடவில்லை. இருப்பினும் கிட்டத்தட்ட அனைத்து விவகாரங்களும் முடிந்து விட்டது என்று இங்கிலாந்து வாரியம் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே ஆன்டி பிளவர் பயிற்சியாளர் ரேசில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.
முற்றும்.
மே 10ல் நாடு திரும்புகிறார் தில்ஷான் 26 Apr 2025 உலககோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பின் சங்ககரா இலங்கை கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக தில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. மே 14ல் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதற்கு வசதியாக தில்ஷான் மட்டும் மே 10ம் தேதி இலங்கை திரும்புகிறார். மற்ற வீரர்கள் மே 18ம் தேதி இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்கிறார்கள்.
முற்றும்.
வீரர்கள் போட்டி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட நேரிடும் : அலெஸ்டர் குக் 26 Apr 2025 அதிகமான போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் அடிக்கடி காயம் அடைவதுடன், மிக விரைவிலேயே விளையாட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில், போட்டித் தொடர்களுக்கு இடையே போதிய இடைவெளி கொடுக்க வேண்டியது அவசியம். இதை கவனத்தில் கொண்டு அட்டவணையை தயாரிக்க வேண்டும். இல்லையென்றால், வீரர்கள் போட்டி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட நேரிடும்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் அலெஸ்டர் குக் கூறியுள்ளார்.
முற்றும்.
|