முமைத்கான் வெளியிட்ட கவர்ச்சி வீடியோ கேசட்
சென்னை: மார்க்கெட் இழந்த நடிகை முமைத்கான் கவர்ச்சி வீடியோ கேசட் வெளியிட்டார்.மார்க்கெட் டல்லடிக்கும் ஹீரோயின்கள் பரபரப்பாக பேசியும், சில கவர்ச்சி நடிகைகள் நிர்வாணமாக ஸ்டில்களை வெளியிட்டும் கவனத்தை ஈர்ப்பது இப்போதைய டிரெண்ட். அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் மற்றொரு கவர்ச்சி நடிகை முமைத்கான். ‘டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்ல என்று குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உசுப்பேற்றிய அவர் ‘கந்தசாமி, ‘மம்பட்டியான் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் குத்தாட்டம் போட்டு கிறங்கடித்திருக்கிறார். தற்போது அவரது மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கியதுடன் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கும் சூழல் ஏற்பட்டது.
சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று மீண்டும் வேகத்துடன் புறப்பட்ட முமைத்துக்கு நண்பர்கள் அட்வைஸ் சொன்னார்கள். ‘முதலில் உன்னுடைய இளமையின் கட்டுக்கோப்பை வெளிக்காட்டும்விதமாக வீடியோ ஆல்பத்தை வெளியிடு. அதன்பிறகு உன்னை தேடி வாய்ப்பு கொட்டும் என்றார்கள். இதையடுத்து ‘அடிக்ஷன் என்ற பெயரில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அதை வெளியிட்டிருக்கிறார். இந்த கேசட்டுகளை பிரபல இயக்குனர்களுக்கு கிப்டாகவும் அனுப்பி இருக்கிறார். ஆனால் எந்த இயக்குனரிடமும் இருந்து இதுவரை நடிக்க அழைப்பு வரவில்லையாம்.