அஞ்சலி நடிக்கும் படம் வருமா? களஞ்சியம் பதில்
‘பூமணி’, ‘பூந்தோட்டம்’, ‘கிழக்கும் மேற்கும்’, ‘கருங்காலி’ போன்ற படங்களை இயக்கியவர் களஞ்சியம். ‘கருங்காலி’ படத்தில் அஞ்சலியுடன் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்தனர். அஞ்சலி நாயகியாக நடிக்கும் ‘ஊர்சுற்றி புராணம்’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்தும் வந்தார். 2 வருடத்துக்கு முன் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து படம் தடைபட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார் களஞ்சியம். அது இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் களஞ்சியம் புதிய படங்களில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியது: ஊர் சுற்றி புராணம் 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. அஞ்சலி நடிக்க வராததால் அவரிடம் கால்ஷீட் பெற்று தரும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். தற்போது நடிப்பு, இயக்கம் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறேன். கோடை மழை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். ‘களவு தொழிற்சாலை’யில் உளவுத் துறை அதிகாரியாக நடிக்கிறேன். அடுத்து புதுமுகங்கள் நடிக்கும் ‘முந்திரிக்காடு’ படத்தை தயாரித்து இயக்குகிறேன்.