ஸ்ரேயாவுக்கு திடீர் வாய்ப்பு கைகொடுக்குமா?
சில வருடங்களுக்கு முன் கால்ஷீட் கொடுக்க அவகாசம் இல்லாமல் தமிழ், இந்தி, தெலுங்கு என பறந்துகொண்டிருந்தார் ஸ்ரேயா. திடீரென்று அவரது மார்க்கெட் சரிந்தது. கடந்த 3 ஆண்டாகவே ஆண்டுக்கு ஒரு படம் என வேற்றுமொழிகளில் தலைகாட்டி வந்தார். தமிழைப் பொறுத்தவரை கடந்த 2011ம் ஆண்டு ‘ராஜபாட்டை’ படத்தில் நடித்ததற்கு பிறகு புதிய தமிழ் படம் எதிலும் நடிக்கவில்லை. தற்போது ‘பாகுபலி 2’ம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணாவின் மனைவியாக அவர் நடிக்க உள்ளார். இந்நிலையில் மும்பையில் ராணாவுக்கு ஸ்ரேயா சமீபத்தில் இரவு விருந்து கொடுத்ததாக பாலிவுட்டில் தகவல் பரவி உள்ளது.அனுஷ்கா, தமன்னா ஏற்கனவே பாகுபலி 2வில் நடித்து வருகின்றனர். எதிர்பாராத விதமாக ஸ்ரேயாவுக்கு அமைந்த இந்த வாய்ப்பு அவருக்கு புதுபட வாய்ப்புகளை பெற்றுத்தருமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. பாகுபலி 2ம் பாகத்தின் டீசர் தசரா தினத்தன்று வெளிவரவுள்ளது. அடுத்த ஆண்டு படம் திரைக்கு வருகிறது.