சூரி படத்தில் மும்பை மாடல் குத்தாட்டம்
பொன்மனம்’, ‘என் புருசன் குழந்தை மாதிரி’, ‘சுறா’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் அடுத்து இயக்கும் படம் ‘பாக்கணும்போல இருக்கு’. பரதன் ஹீரோ. அன்சிபா ஹீரோயின். காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து உருவாகி வரும் இதில் சூரி, கஞ்சா கருப்பு புதிதாக காமெடி கூட்டணி அமைத்திருக்கிறார்கள். ஏற்கனவே கவுண்டமணி, செந்தில் நடித்த பல படங்களில் காமெடி டிராக் எழுதியவர் இயக்குனர் ராஜ்குமார். இவர் முதன்முறையாக சூரிக்கு இப்படத்தில் நகைச்சுவை காட்சிகள் எழுதி இருக்கிறார். கவர்ச்சிக்கும் படத்தில் இடம் தரவேண்டும் என்று ஆலோசனை எழுந்ததையடுத்து மும்பை பறந்த இயக்குனர் மாடல் அழகி பூஜாவை தேர்வு செய்து வந்தார். அவருக்காக ‘குப்பம்மா மகளே எப்பம்மா வச்சிக்கலாம்..’ என்ற குத்து பாடலும் எழுதினார் இயக்குனர். இப்பாடலுக்கு பூஜாவின் குத்தாட்டம் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அருள்தேவ் இசை. துவார் ஜி.சந்திரசேகர் தயாரிப்பு.