நடிகருக்கு காதல் வலைவீசும் டாப்ஸி
திரிஷாவுடனான காதல் முறிவுக்கு பிறகு வேறு ஹீரோயின்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் ராணா. ‘நான் தனி ஆளாக இருக்கிறேன். நடிப்பில்தான் என் கவனம்’ என்று கூறும் ராணா தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார். ராணாவின் நெடுநெடு தோற்றம் ஹீரோயின்களை வெகுவாக கவர்கிறது. அவர் அழைத்தால் விருந்துக்கும் செல்கின்றனர். அதேபோல் நடிகைகளும் ராணாவை தாங்கள் நடத்தும் பார்ட்டிகளுக்கு அழைக்கின்றனர். தற்போது இந்தியில் ‘காஸி’ படத்தில் நடித்து வருகிறார் ராணா.
இதில் டாப்ஸி ஹீரோயின். இப்படம் இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பை மலரச் செய்திருக்கிறது. ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது முதல் நீண்ட நேரம் ஒன்றாக பேசி கழிக்கிறார்கள் என யூனிட்டார் தெரிவிக்கின்றனர். இதுபற்றி டாப்ஸி கூறும்போது,’எங்கள் கம்பெனியை (நட்பு) இருவருமே விரும்புகிறோம். அதேசமயம் உணவு விஷயத்தில் ராணாவுக்கும் எனக்கும் பொதுவான ஒற்றுமையை உணர்ந்திருக்கிறோம். என்ன சாப்பிடுவது என்பதைகூட சில சமயம் இருவரும் ஒன்றாக அமர்ந்து முடிவு செய்து மெனு ஆர்டர் செய்கிறோம். விருப்பமான உணவு உண்பதற்கு கம்பெனி தருவதற்கு ஒருவர் (ராணா) உடனிருப்பது ரொம்பவே சந்தோஷம்’ என குறிப்பிட்டார்.