கத்தார் நாட்டின் தோஹா நகர எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் ஓடும் டிரக்கில் இருந்து புலி ஒன்று கீழே விழுந்தது. சாலையில் வாகனங்கள் வரிசையாக நிற்க, அந்த புலி எங்கு செல்வது எனத் தெரியாமல் திகைத்து, அங்குமிங்கும் ஓடி வாகன ஓட்டிகளை பயமுறுத்தியது.அந்த புலி சாலையில் அங்குமிங்கும் ஓடியதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த வீடியோ காட்சிகள்தான் தற்போது பல்வேறு இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள பணக்காரர்கள், தங்கள் வீடுகளில் புலிகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இந்த புலியின் உரிமையாளர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.